"விஜயதாரணி வருகை தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் " - அண்ணாமலை
Feb 24, 2024, 14:22 IST
பிரதமர் மோடியின் தலைமையால் கவரப்பட்டு, விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி. கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார் விஜயதரணி. காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளதால் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதியை ஒதுக்க காங்கிரஸ் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சகோதரி @VijayadharaniM அவர்களை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.