×

விஜயபாஸ்கரின் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்!!

 

சி.விஜயபாஸ்கரின் மனைவி, மகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக வழக்கறிஞர் பாபுமுருகவேல் தெரிவித்துள்ளார்.

அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி அறக்கட்டளை தொடங்கி 14 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் சி.விஜயபாஸ்கர் என்று எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துகொள்ள நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை பதவியில் இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த‌தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்  சி.விஜயபாஸ்கர் வீட்டில் , அவரிடமும்,  மனைவி ரம்யாவிடமும்   லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி , மூத்த மகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் இருவரும் மூன்று நாட்களாக தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர் என இவர்களின் வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.  இதன் காரணமாக தனிமைப்படுத்தி கொண்டுள்ள விஜயபாஸ்கர் மனைவியிடம் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினர், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்குகொரோனா  தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் முடிந்துவிட்டது. அவரின் மூத்த மகளுக்கு தொற்று  ஏற்பட்டு இன்றுடன் 14 நாட்கள் ஆகி இருக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளனர்.