தேதி குறித்த விஜயபாஸ்கர்- அதிமுகவினர் அதிர்ச்சி
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்தும் விலகி, ஆதரவாளர்களோடு வரும் திங்கட்கிழமை தவெகவில் இணைகிறார்.
கடந்த 16ஆம் தேதி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர். சபாநாயகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார். அதிமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக ஏற்கனவே 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், சி.விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவால் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் சரிந்தது. 47 ஆக இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை தற்போது 42 ஆக சரிந்தது.
இந்நிலை்ில் வருகின்ற திங்கட்கிழமை அதிமுகவில் இருந்து விலகிய விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளார். திருவான்மியூரில் உள்ள ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தில் இந்த விழாவானது நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மூத்த நிர்வாகிகள் பலர் இணை உள்ளனர்.