×

என்ன தவறு செய்தோம், ஏன் வாக்களிக்க மறுக்கிறீர்கள்! கதறும் விஜய பிரபாகரன்

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு திமுகவும், அதிமுகவும் கூட்டணி கட்சிகளுடன் கறார் காட்டி வந்ததால், அதிமுகவில் இருந்து கருணாஸ் வெளியேறியதைத் தொடர்ந்து, விஜயகாந்த் கட்சியும் வெளியேறின. இதனால் சட்டமன்றத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது தேமுதிக.தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஞானபண்டிதனை ஆதரித்து விஜயபிரபாகரன்
 

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு திமுகவும், அதிமுகவும் கூட்டணி கட்சிகளுடன் கறார் காட்டி வந்ததால், அதிமுகவில் இருந்து கருணாஸ் வெளியேறியதைத் தொடர்ந்து, விஜயகாந்த் கட்சியும் வெளியேறின. இதனால் சட்டமன்றத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது தேமுதிக.தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஞானபண்டிதனை ஆதரித்து விஜயபிரபாகரன் தொகுதிகுட்பட்ட பகுதிகளில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மக்கள் பிரச்சினையைப் பற்றி யாரும் பேசவில்லை. மாறி மாறி ஊழல் செய்ததை பற்றியே பேசிவருகின்றனர்.
1,000 மற்றும் 1,500 ரூபாய்க்காக சிந்திக்காதீர்கள், ரேஷன் பொருட்கள் வீட்டுகே வரும் என கேப்டன் 15 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்துவிட்டார். தேமுதிகவுக்கு ஏன் வாக்களிக்க மறுக்கிறீர்கள், தேமுதிகவும் விஜயகாந்தும், நாங்களும் என்ன தவறு செய்தோம்” எனக் கேள்வி எழுப்பினார்.