காலை முதல் நோன்பு கடைப்பிடித்த விஜய்- இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு விஜய் வருகை புரிந்துள்ளார்.
ரமலான் திருநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் உணவகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெறும் நோம்பு திறப்பு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துக்கொண்டுள்ளார். இன்று மாலை 6.22 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் நிகழ்வில் 1000 பேர் கலந்துக்கொள்ள உள்ளனர். நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அழைப்பிதழ் வைத்துள்ள நபர்களை மட்டுமே உள்ள செல்ல அனுமதித்து வருகின்றனர். அழைப்பிதழ் இல்லாத நபர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க்க அனுமதிக்கவில்லை.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை அருகே நடைபெறும் நிகழ்வில் விஜய் கலந்துக்கொள்ள இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் நோன்பு கடைப்பிடித்து இந்த நிகழ்வில் விஜய் பங்கேற்று நோன்பு திறக்கிறார்.