#BREAKING அரசு அதிகாரிகளை களையெடுக்கும் விஜய்- ரெய்டில் சிக்கிய ரூ.1.18 கோடி!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை மேற்கொண்டனர்.
‘ஆடுனா காலும், பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு’ ஒரு பழமொழி சொல்லுவார்கள். அது போல லஞ்சம் வாங்கிய அதிகாரிகளால் பணம் வாங்காமல் இருக்க முடியவில்லை. இதனால் தமிழக வெற்றி கழக அரசில் பணம் சம்பாதிக்க முடியாது என்பதால் அதிகாரிகள் இந்த அரசை ஸ்தம்பிக்க வைக்க சதிசெய்து வருவதாகவும், இதனால் பல அரசு அலுவலகங்களில் கோப்புகள் நகராமல் அப்படியே தேங்கியே கிடப்பதாகவும் அண்மையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியிருந்தார். அதுமட்டுமின்றி, இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்துவதோடு இந்த அரசை ஸ்தம்ப்பிக்க வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே சில அரசு அதிகாரிகளின் இலக்காக உள்ளதாகவும் அவர் மேடையில் பேசியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை மேற்கொண்டனர். பேரூராட்சி, நகராட்சி, வட்டாட்சியர், சார் பதிவாளர் உள்ளிட்ட அரசுஅலுவலகங்களில் திடீர் ரெய்டு நடத்தப்பட்டது. அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.18 கோடி சிக்கியதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கணக்கில் வராத ரூ. 28.24 லட்சம், ஜி-பே பரிவர்த்தனை ரூ.89.89 லட்சம் சிக்கியதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை கிண்டி அரசு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்தில் ஜி- பே மூலம் 31.52 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.