×

ஆகஸ்ட் 15ம் தேதி முதல்முறையாக கொடியேற்றும் விஜய்... வைகோவுக்கு விருது

 

வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் ஜெ. முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றவுள்ளார்.

சுதந்திர தின விழாவின் முக்கிய நிகழ்வாக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்படும் தகைசால் தமிழர் விருது பெறுவதற்கான பெயர்கள் குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளாக சுதந்திர தின விழாவில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரைய்யா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் தகைசால் தமிழர் விருதைப் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு, முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.