சீமானை பின்பற்றும் விஜய் : 234 தொகுதிகளிலும் த.வெ.க தனித்து போட்டி - செங்கோட்டையன்..!
த.வெ.க.தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றிவாகை சூடப்போகிறது. தமிழகத்துக்கு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டும் தேவையில்லை. விஜய்தான் முதல்வராகவேண்டும் என்கிற உணர்வோடு, அனைவரும் கூடியிருக்கின்றனர்.த.வெ.க. கூட்டத்தை பார்த்து, தேர்தலில் நிற்கலாமா, வேண்டாமா என்று பலரும் அச்சப்படுகின்றனர். தமிழகத்தில், எந்த சக்தியாலும் த.வெ.கவை வெல்லமுடியாது.எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்குப்பிறகு, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற விஜய் வந்திருக்கிறார். தமிழகத்தில் மீண்டும் ஒரு மாற்றம் நிகழவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
மேலும் அவர் பேசியதாவது, 234 தொகுதிகளிலும் த.வெ.க தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் என செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை கண்டுபிடிக்கும் பணியில் கட்சி ஈடுபட்டுள்ளதாகவும் கூட்டணி பற்றிய தகவல்கள் முற்றிலும் தவறானது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.