வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் விஜய்
வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் தவெக தலைவர் விஜய் ஈடுபட்டுவருகிறார்.
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களின் விவரங்களை சேகரிக்க விண்ணத்தை தவெக வெளியிட்டுள்ளது. போட்டியிட விரும்பும் தொகுதி, போட்டியிட விரும்புவதற்கான காரணங்கள், வெற்றி வாய்ப்பு நிலவரங்களை தவெக தலைமை கேட்டுள்ளது. வேட்பாளரின் சொத்து மதிப்பு, முகவரி உட்பட முழு சுய விவரங்களை சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தவெக மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தில் ஆற்றிய பணிகளின் விவரங்களையும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் அது தொடர்பான விவரங்களையும் தவெக நிர்வாகிகள் சேகரித்துவருகின்றனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக தலைமைக்கு அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் விண்ணப்பிப்பவர்களின் சுயவிவரங்களை பார்த்து தேர்தலில் சீட் வழங்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.