திருப்பூரில் விஜய் நாளை பரப்புரை
நாளை திருப்பூர் மாவட்டத்தில் விஜய் பரப்புரை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலையத்தில் செங்கோட்டையன் மற்றும் சத்தியபாமா இருவரும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் அசோக் கிடம் பேசிய பிறகு நாளை திருப்பூர் மாவட்டத்தில் ரோடு ஷோ மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
தவெக தலைவர் விஜய் நாளை கோவை விமான நிலையத்திலிருந்து கொச்சின் - சேலம் ஆறுவழிச் சாலை மார்க்கமாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி பைபாஸ் சாலையில் திருப்பூர் சாலை சந்திப்பிலிருந்து மாலை 3 மணிக்கு துவங்கி அவிநாசி புதிய பேரு நிலையத்தில் "U" டர்ன் எடுத்து மீண்டும் அதே வழியிலேயே பைபாஸ் திருப்பூர் சாலை சந்திப்பு வரை ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தொடர்ந்து கொச்சின் - சேலம் ஆறுவழிச்சாலை வழியாக பெருமாநல்லூர் சென்று அங்கு நான்கு ரோடு சந்திப்பில் வாகனத்தில் இருந்தபடி எட்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார். அதனை தொடர்ந்து, சேலம் - கொச்சின் ஆறுவழிச்சாலை வழயாக கோவை விமான நிலையம் செல்கிறார். விஜய் நிகழ்ச்சிக்கு அனுமதியளித்த போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.