☰
×

களத்தில் இறங்கும் விஜய்!

 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று மாலை 3.30 மணிக்கு ரிப்பன் மாளிகையில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தெரிகிறது.

சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையால் குடியிருப்புகளும் சாலைகளும் வெள்ளக்காடாக மாறின, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியனர். சென்னை மாநகராட்சிப் பகுதியில் பெய்த அதிகனமழையினை தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டது.இரவு முழுவதும் 15,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர். பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 9 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் 30 cm-க்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவான போதும் காலை நேரத்திற்குள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது. கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மழைநீர் வெளியேற்றப்பட்டு சுரங்கப்பாதைகள் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. மழைநீர் தேங்கியிருந்த அனைத்து சுரங்கப்பாதைகளும் நீரேற்றம் செய்யப்பட்டு காலை 6 மணிக்கே போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.


இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று மாலை 3.30 மணிக்கு ரிப்பன் மாளிகையில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தெரிகிறது. சென்னையில் கனமழை பாதிப்புகள், மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளவுள்ளார்.