×

#BREAKING “ஆண்டவன் மீது ஆணையிட்டு..”- முதல்வராக பதவியேற்றார் விஜய்

 

தமிழ்நாட்டின் 17வது முதல்வராக பதவியேற்றார் தவெக தலைவர் விஜய்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து வெற்றி அறிவிப்புகள் வெளியான நிலையில் 100-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தினர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி அமைக்க தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆதரவளித்த நிலையில், இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தவெக தலைவர் முதலமைச்சராக பதவியேற்றுகொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். விஜய் பதவியேற்றபோது அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆனந்த கண்ணீர் விட்டனர். ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிக்கூறுகிறேன் எனக்கூறி விஜய் பதவியேற்றுக்கொண்டார். ராஜாஜி முதல் ஸ்டாலின் வரை இதுவரை 12 முதல்வர்கள் பதவியில் இருந்த நிலையில், 13வது நபராக விஜய் பதவியேற்றார்.