“V இல்லை S மட்டும்தான்”- விஜய்யின் மகன் அதிரடி முடிவு
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தான் இயக்கி வரும் “Sigma” திரைப்படம் தொடர்பான சில கையெழுத்துகளில் தனது பெயரை “Jason Sanjay S” என குறிப்பிடுவதாக வெளியான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என கூறி விவாகரத்து கோரினார் அவரது மனைவி சங்கீதா. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த நடிகை யார் என்று சங்கீதா குறிப்பிடாத நிலையில், நடிகை திரிஷாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் ஜோடியாக கலந்து கொண்டது பேசு பொருளானது.
இப்படியான சூழலில், நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தான் இயக்கி வரும் “Sigma” திரைப்படம் தொடர்பான சில கையெழுத்துகளில் தனது பெயரை “Jason Sanjay S” என குறிப்பிடுவதாக வெளியான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. ஜேசன் தனது இனிஷியலை மாற்றியிருக்கலாம் என்றும், “S” என்பது அவரது தாயார் Sangeeta Sornalingam பெயரின் முதலெழுத்தாக இருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். ஆனால் இதுகுறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லை.