புதிய சாதனை படைக்கும் விஜய்..! தவெக அமைச்சரவையில் 7 தலித் அமைச்சர்கள்..!
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது.அதே போல் ஆளுநர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்நிலையில் இன்று பதவியேற்கும் 23 புதிய அமைச்சர்களில் 7 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த 7 பட்டியலின அமைச்சர்களில் 6 பேர் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ஏற்கனவே பதவியேற்ற 9 அமைச்சர்களில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், மொத்தம் 8 பட்டியலின அமைச்சர்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர்.
இந்த 7 பட்டியலின அமைச்சர்களில் 6 பேர் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
அதன்படி, எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகனும், அவிநாசி தொகுதியில் கமலியும், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் மதன் ராஜாவும் அமைச்சராகியுள்ளனர். அதேபோல் அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ. காந்திராஜ், ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ் செல்வன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ., தென்னரசு மதுரை மேலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஸ்வநாதன் ஆகிய 7 பட்டியலின அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 6 பேர் தமிழக வெற்றிக் கழகம், ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் விசிகவுக்கு ஒரு அமைச்சர் பதவி தரப்படவுள்ளது. அந்த வகையில் பார்க்கையில் தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த 8 பேர் இம்முறை இடம்பெறுகின்றனர்.