"விஜய்யின் ஆட்சி எப்படி?" - கேள்விக்கு விஜய் சேதுபதியின் பளிச் பதில்
'ட்ரெயின்' பட புரமோஷனுக்காக மிஷ்கினுடன் கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், முதல்வர் விஜய்யின் ஆட்சி குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, விஜய் Sir-ஐ எனக்கு நடிகராகத் தெரியும், அவருடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் அரசியல் விமர்சனம் வைக்க எனக்குத் தெரியும், ஆனால் இங்கே எந்தக் கட்சியும் அதை ஆரோக்கியமாக எடுத்துக்கொள்வதில்லை.என் கருத்து நான் நடித்த படத்தை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது. அரசியல் என்பது அவர்கள் போடும் திட்டங்களும், செயல்படுத்துவதும்தான். அதை உட்கார்ந்து பார்ப்பது எனது வேலை இல்லை. எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அரசியல் கருத்து பேசுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அதை நாகரிகமாக ஏற்றுக்கொள்ளும் தன்மை யாருக்கும் இல்லை. அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி. அதேபோல், ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதைத் தொடர்ந்து கவனித்து வர வேண்டும். முழுமையாகப் பின்தொடராமல் பொதுவான கருத்துகளைத் தெரிவிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றார்.
அரசியலுக்கு வரும் ஆசை உண்டா என்ற கேள்விக்கு, அரசியல் என்பது ஆசை அல்ல, சேவை என்றும், 'துளி' தொண்டு நிறுவனம் மூலம் செய்யும் உதவிகளே தனக்குப் போதும், அரசியலுக்கு வர விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார்