விஜய்யின் புதிய அறிவிப்பு
கட்சியின் மகளிர் அணியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ஒரு ஒருங்கிணைப்பாளரையும், 10 இணை ஒருங்கிணைப்பாளர்களையும் நியமித்து தவெக தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிருக்கான வாய்ப்புகளை விசாலப்படுத்துவதிலும், அவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதுமே முன்னிலையில் இருப்பதை அனைவரும் அறிவீர்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் படையினரது செயல்பாடுகள், மற்ற அரசியல் இயக்கங்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்து வருவதும் அனைவரும் அறிந்ததே. இத்தகைய சிறப்பு மிக்க நமது தவெக மகளிர் அணியில் அதன் கட்டமைப்பினை மேலும் வலுப்படுத்தும் வகையில், மாநில அளவில் பின் வரும் முறையில் நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். மகளிர் அணியின் ஒருங்கிணைப்பாளராக ஸ்பூர்த்தி அருண் நியமிக்கப்பட்ட நிலையில், மேலும் 10 பேர் இணை ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.