×

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தனி அறையில் தனித்தனியாக சந்தித்த விஜய்!

 

கடந்த மாதம் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜயின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை சந்தித்ததற்கு பிறகுதான் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என கட்சித் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரூரில் இருந்து பேருந்து மூலம் மகாபலிபுரம் அடுத்துள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு அழைத்துவரப்பட்டு அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார் கட்சியின் தலைவர் விஜய். ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனி அறையில், தனித்தனியாக சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டு அறிந்து அவர்களிடம் விரிவாக பேசி வருகிறார். இது தொடர்பாக ஒரு குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக பேசும்பொழுது அவர்கள் தெரிவிக்கையில், 

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்களை பார்த்து கண்ணீர் விட்டு அழுதும், கூட்ட நெரிசலில் சிக்கி அவர்களது குழந்தைகளை இழந்த ஒரு பெற்றோர் காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதார். ஆறுதல் தெரிவிப்பதற்காக கரூரில் இருந்து அழைத்து வந்த அனைத்து குடும்பத்தாரிடமும் முதலில் சென்னை அழைத்து வந்ததற்கு மன்னியுங்கள் என்றார். உங்கள் குடும்பத்தில் ஒருவராக என்னை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருப்பேன் உங்களுக்கு என்ன உதவி தேவை என்றாலும் நான் செய்து தருவேன் என்றும் உறுதியளித்துள்ளார். வேலைவாய்ப்பு, திருமணம், கல்வி என குடும்பத்தினர் கொடுத்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதி தெரிவித்துள்ளார்.