×

12 ஆண்டுகளுக்கு பின் மோடியுடன் விஜய் சந்திப்பு- 30 நிமிடங்கள் பேசியது என்ன?

 

பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.

பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் சந்தித்தார். டெல்லி பிரதமர் அலுவலகமான சேவா தீர்த் பவனில் சந்திப்பு நடைபெற்றது. முதலமைச்சராக பதவி ஏற்று முதன்முறையாக மோடியை சந்திக்கிறார் விஜய். அமைச்சர்கள் யாரும் இல்லாமல் சென்று மோடியை சந்தித்துள்ளார் விஜய். 12 வருடங்களுக்குப் பிறகு பிரதமரை விஜய் சந்தித்துள்ளார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. தமிழக வளர்ச்சி திட்டங்கள், தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு, மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தின் கோரிக்கைகள் தொடர்பான மனுவையும் மோடியிடம் விஜய் வழங்கினார்.

முன்னதாக, 2014-ஆம் ஆண்டு (சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்) 'கத்தி' திரைப்பட வெளியீட்டின் போது நடிகர் விஜய், நரேந்திர மோடியைச் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.