பிரச்சாரத்திற்கு வந்த இடத்தில் பேசாமல் சென்ற விஜய்
சிவகங்கை மாவட்ட தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்ய இருந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததால் விஜய் பேசவில்லை.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், பிரச்சாரம் சென்ற எந்த இடத்திலும் இதுவரைக்கும் வேட்பாளரை அவருடைய வாகனத்தில் ஏற்ற வில்லை. முதன்முறையாக காரைக்குடி வேட்பாளர் பிரபு அவர்களை வாகனத்தில் ஏற்று பிரச்சாரம் செய்தார். கூட்டம் கட்டுக்கடங்காமல் காரைக்குடி தேவர் சிலை அருகே நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் விஜய் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்தது காவல்துறை. பரப்புரைக்கு தாமதமாக வந்த நிலையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் விஜய் திரும்பி சென்றார்.
தேவர் சிலை பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய 12 முதல் 2.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், விஜய் அப்பகுதிக்கு சென்ற போது நேரம் கடந்து விட்டதால் அவர் பேசவில்லை. வாகனத்தில் தேவர் சிலையை சுற்றி தொண்டர்களுக்கு கை அசைத்து திரும்பிச் சென்றார் விஜய். சீமான் போட்டியிடும் தொகுதி என்பதால் விஜய் பேச்சுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. சூழ்நிலை காரணமாக அவர் பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.