அவசர அவசரமாக சென்னையில் உள்ள சொத்துக்களை விற்கும் விஜய்..! காரணம் இது தானாம்..!
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், தற்போது ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, விஜய் தனக்கு சொந்தமாக இருந்த ஒரு சொத்தை ரூ. 35 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். சென்னை அண்ணா நகரில் இருக்கும் ஒரு சொத்தை விஜய் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக விற்பனை செய்திருக்கிறார். அண்ணா நகரில் இருந்த அந்த சொத்தை விற்க கடந்த ஓராண்டாக பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தற்போது அவசர அவசரமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா நகரில் இருக்கும் இந்த சொத்தை விற்றது மட்டுமல்லாமல், இன்னும் சில சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் விஜய் அவசர அவசரமாக சொத்தை விற்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
முதல் காரணமாக, விஜய்யின் மனைவி சங்கீதா தற்போது விவாகரத்து கோரி இருக்கிறார். இது தொடர்பாக விஜய் வரும் ஏப்ரல் 20 ஆதேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜாராகும்படி கூறப்பட்டுள்ளது. ஒருவேளை விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து பெற்று பிரிந்தால், மனைவி சங்கீதாவுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும். அதிக சொத்து மற்றும் வருமானம் இருந்தால் அதற்கு எற்றவாறு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்றும் விஜய் தனது சொத்துக்களை விற்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாவதாக, தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. மார்ச் 30 ஆம் தேதிக்கு பின் விஜய் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அப்போது சொத்து தொடர்பான பிரச்சனை ஏதும் வரக்கூடாது என்றும் தனது சொத்துக்களை குறைத்து காட்ட விரும்புகிறார் என்பதற்காக அவர் தனது சொத்துக்களை விற்க தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.