×

நல்லகண்ணு குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தறிந்த விஜய்

 

அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தினரிடம் தவெக தலைவரும் நடிகருமான விஜய் நலம் விசாரித்தார்.

24 ஆகஸ்ட் 2025 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமாகிய திரு. இரா. நல்லகண்ணு கடந்த 22 ஆகஸ்ட் 2025, வீட்டில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். இங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், சி.பி.ஐ. மூத்த தலைவர் நல்லகண்ணு குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்ட த.வெ.க. தலைவர் விஜய், அவரது நலம் விசாரித்தறிந்தார். அவரின் பேரனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட விஜய், நல்லக்கண்ணு ஐயா அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.