குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்!
Mar 30, 2026, 18:35 IST
விஜயின் அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என குடும்பத்தில் அனைவருமே விஜய்க்கு கடனாளிகள் என்பது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். விஜய் வழங்கிய வேட்புமனுவில் சொத்து விவரங்களில், தவெக தலைவர் விஜய்யின் பெயரில் உள்ள வாகனங்களில் அதிகபட்சமாக ரூ. 3 கோடி மதிப்புள்ள டொயோட்டா லெக்சஸ் கார் உள்ளது. குறைந்தபட்ச மதிப்பாக ரூ. 67 ஆயிரம் மதிப்புள்ள டிவிஎஸ் எக்ஸல் சூப்பர் இரு சக்கர வாகனம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விஜய் தனது மனைவி சங்கீதாவுக்கு ரூ.12 கோடியும், அப்பா சந்திரசேகருக்கு ரூ.3 கோடியும், அம்மா ஷோபாவுக்கு ரூ.87 லட்சமும், மகன் ஜேசனுக்கு ரூ.8 லட்சமும், மகள் ஷாஷாவுக்கு ரூ.4 லட்சமும் கடனாக வழங்கியுள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.