×

"விஜய்க்கு வீட்டுக்கு ஒரு ஓட்டு உள்ளது"- நிர்மல்குமார்

 

நல்லவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், “கரூர் சம்பவத்தின்போது தலைவர் விஜய் தவிர்த்த தவிப்பை, நாங்கள் யாரும் அதை மறக்கவே முடியாது. ஒரு நல்லவர் அரசியலுக்கு வந்துள்ளார். . களம் தவெக பக்கம் உள்ளது. விஜய்க்கு வீட்டுக்கு ஒரு ஓட்டு உள்ளது. வீட்டுக்கு ஒரு ஓட்டு என்றாலே 40 சதவீதம் ஓட்டு தவெகவுக்கு நிச்சயம் உள்ளது. இப்படி ஒரு மக்கள் வரவேற்பு எந்த தலைவருக்கும் கிடையாது. யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது என மக்களுக்கு தெரியும். நல்லவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே மக்களின் விருப்பம்” என்றார்.