அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் அரசு : ஒரே இடத்தில் 5-10 ஆண்டுகள் பணியாறும் ஊழியர்களுக்கு செக்..!
அரசு விதிகளின்படி, பதவி உயர்வு வரும்போது ஊழியர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது வழக்கம். ஆனால், சிலர் பதவி உயர்வு பெற்று வேறு ஊருக்குச் சென்று சில நாட்களிலேயே, நிர்வாகக் காரணங்களைக் காட்டி அல்லது தற்காலிகப் பணி மாற்றம் மூலமாக மீண்டும் பழைய இடத்திற்கே வந்து விடுகின்றனர்.
இதனை தடுக்க முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு முடிவு செய்துள்ளது.
அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் இயக்குநரகங்கள் மற்றும் தலைமை அலுவலகங்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இது குறித்து அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலகக் கண்காணிப்பாளர், உதவியாளர் ஆகிய பணியிடங்களில் உள்ள ஊழியர்கள், ஒரே இடத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்களா என்ற முழு விபரங்களை சேகரித்து வரும் செப் 23ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு அரசு ஊழியர் ஒரே இடத்தில், பல ஆண்டுகள் தொடர்ந்து நீடித்தால் நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. ஒரே இடத்தில் நீண்ட காலம் இருப்பதால் புதிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை.மக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, முறைகேடுகள் மற்றும் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என அரசு தரப்பில் கருதப்படுகிறது. இதனால், ஒரே இடத்தில் பணியாற்று அரசு ஊழியர்கள் பணியிடை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவுக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்