10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சாரக் குழுவை அமைத்த விஜய்!
Jan 16, 2026, 21:50 IST
2026 பொதுத் தேர்தலுக்காக 10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சாரக் குழுவை அமைத்து தவெக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மாநில, மாவட்ட தொகுதி அளவிலான தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்ள 10 கொண்ட குழுவை தவெக தலைவர் விஜய் அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அக்குழுவில் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், பார்த்திபன், ராஜ்குமார், விஜய் தாமு, செல்வம், பிச்சைரத்தினம் கரிகாலன், செரவு மைதின் (எ) நியாஸ், கேத்ரிள் பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு 234 தொகுதிகளிலும் ஆலோசனை கூட்டங்கள், பிரச்சார கூட்டங்கள் உள்ளிட்ட்வற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.