×

பழனி கோவிலில் அத்துமீறிய விஜய் ரசிகர்! கோயில் மைக்கில் தவெக பாடலை ஒலிக்க செய்து அட்டகாசம்

 

பழனி முருகன் கோயிலில் பக்தர்களை ஒழுங்குபடுத்துவதற்காக கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் இளைஞர் ஒருவர் தவெக-வின் கட்சி பாடலை ஒளிப்பரப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர் . பழனி முருகன் கோயில் படிவழிப் பாதை வழியாக பக்தர்கள் மலை மீது செல்கின்றனர். பக்தர்களுக்கு அறிவிப்பு வழங்குவதற்காக கோயில் நிர்வாகம் ஆங்காங்கே ஒலிபெருக்கிகள் பொருத்தி மைக் மூலம்  அறிவிப்புகள் செய்வது வழக்கம். இந்த நிலையில் பழனி முருகன் கோயிலுக்கு வந்த விஜய் ரசிகர் ஒருவர் படிவழிப் பாதையில் இருந்த ஒலிபெருக்கி மூலம் நடிகர் விஜயின்  திரைப்படத்தின் பாடல்களை ஒலிக்க செய்துள்ளார்.  கோயிலில் நேற்று திடீரென திரைப்படப் பாடல்கள் ஒலித்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் செல்போன் மூலம் அந்த இளைஞர் மைக்கில் விஜய் பாடலை ஒளிபரப்புவதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.  இந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பழனி மலை கோயிலுக்கு பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் ஒலிபெருக்கியை தவறாக பயன்படுத்தியது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.