×

விஜய் நிகழ்வு - டாஸ்மாக்கை மூட உத்தரவு
 

 

விஜய் நிகழ்வுக்காக வேலூரில் டாஸ்மாக்கை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் அகரம்சேரி  சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள பள்ளிக்குப்பம் செல்லும் சாலையில் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக 33-ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 5000 பேர் அமரும் வகையில் நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பாடுள்ளது. இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் திறந்தவெளி மைதானத்தில்  பந்தல் அமைக்காமல் அமர்வதற்கு நாற்காலிகள் போடாமலேயே கூட்டங்கள் நடத்தப்பட்டன. வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு முதல் முறையாக தொண்டர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் போடப்பட இருக்கிறது. தொண்டர்கள் வெயிலில் நிற்காமல் இருப்பதற்கு பந்தல் அமைக்கப்பட உள்ளது. 5000 நாற்காலிக்கும், கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ஸ்னாக்ஸ் தண்ணீர் பாட்டில் சிற்றுண்டி வைக்கப்பட உள்ளதாக  நிர்வாகிகள்  தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நாளை தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை நாளை மாலை 6 மணி வரை மூட மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.