கரூரில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி- பந்தல் அமைக்கும் பணியின்போது அசம்பாவிதம்
Jul 8, 2026, 16:40 IST
கரூரில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
வரும் 10-ம் தேதி முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கரூர் செல்லும் நிலையில், பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. முதலமைச்சரின் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். இந்நிலையில் கரூரில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிக்காக பந்தல் அமைக்கும் பணியில், கிரேன் பெல்ட் அறுந்து பெரிய இரும்பு ராடு கீழே விழந்த நிலையில், 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நூலிழையில் உயிர் தப்பினர். எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.