×

ராணுவ வீரரின் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த விஜய்..!

 

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காமில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது தோள் முகம் என பல இடங்களில் காயமடைந்தார்.ஆனாலும் தொடர்ந்து போரிட்டு பயங்கரவாதிகளை வீழ்த்திய அவரது வீரத்தை பாராட்டி ராணுவம் கீர்த்தி சக்ரா விருதினை வழங்கியது. இதையடுத்து அவரை தலைமை செயலகத்திற்கு வரவழைத்த முதலமைச்சர் விஜய், ரொக்க பரிசை வழங்கி பாராட்டினார்.

 

இந்தச் சந்திப்பின் போது, தமிழக அரசின் சார்பில் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு ரூ.48 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் விஜய் வழங்கிக் கௌரவித்தார். மேலும், இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் போது, ராணுவ வீரரின் பச்சிளம் குழந்தையைத் தனது கைகளில் ஏந்தி, அன்போடு கொஞ்சி மகிழ்ந்தார்.குழந்தையை கையில் வாங்கி மடியில் வைத்து கொஞ்சி மகிந்தார்.முதல்வர் விஜய் குழந்தையைக் கொஞ்சும் இந்த அன்பான மற்றும் நெகிழ்ச்சியான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

 

வீரதீர விருது வென்ற தமிழக ராணுவ வீரரை அழைத்து கௌரவித்த முதலமைச்சர் விஜய்... அவரது குழந்தையை கையில் வாங்கி மடியில் வைத்து கொஞ்சி மகிழ்ச்சி..!#KirtiChakra | #LanceNaikMeenatchiSundaram | #MeenatchiSundaram | #CMVijay | #PolimerNews pic.twitter.com/MiUvLXrZnt

— Polimer News (@polimernews) June 15, 2026