#BREAKING விஜய்யின் விவாகரத்து வழக்கு - நாளை விசாரணை
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் நாளை விசாரணை வருகிறது.
முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவகாரத்தில் வழக்கு நாளை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. தனிப்பட்ட பிரச்சனையால் விஜய்- சங்கீதா தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து கோரி, சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
விஜய்யின் மனைவி சங்கீதா, தமக்கு விவாகரத்து கோரி கடந்த 2025ம் ஆண்டு டிச.24ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமக்கு விவாகரத்தும், நிரந்தர ஜீவனாம்சமும் வேண்டும் என்று சங்கீதா கோரியிருந்தார்.இந்த வழக்கானது பிப்.26ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு, செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூன் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வழக்கறிஞர்கள் ஆன்லைனில் விசாரணைக்கு ஆஜராக கோரிக்கை விடுத்தனர். வீடியோ கான்பரன்சிங் விசாரணை இல்லை என கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து, ஆகஸ்ட் 7ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில், விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் நாளை விசாரணை வருகிறது.