இன்றும் அரசியல் தலைவர்களை சந்திக்கும் விஜய்!
Updated: May 12, 2026, 16:00 IST
சட்டமன்றத்திலிருந்து கூட்டம் முடிந்ததும் வெளியேறிய முதல்வர் விஜய் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீனை சந்தித்து வாழ்த்து பெற்றார், பின்னர் ஐ.யூ.எம்.எல் அலுவலகத்திற்கு வெளியே திரண்டியிருந்த கூட்டத்தை பார்த்து காரில் ஏறியதும் கையசைத்தார்.
தொடர்ந்து சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு முதல்வர் விஜய் வருகை புரிந்தார். அவரை வாசலில் வரவேற்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனுக்கு உள்ளே அழைத்து சென்றார். அங்கு காங்கிரஸ் மேலிடப்பொருளாளர் கிரிஷ் சோடங்கர், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகரனுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். பின்னர் காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்.