தவெக திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் மறைவு - விஜய் இரங்கல்!
Mar 15, 2025, 13:49 IST
தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளரார் சஜி உயிரிழந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த அன்பிற்குரிய சகோதரர் திரு. சஜி (எ) B.அந்தோணி சேவியர் அவர்கள் காலமானது, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.
என் மீதும் கழகத்தின் மீதும் அளவற்ற அன்பு கொண்டு கழகப் பணியாற்றி வந்தவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.