☰
×

வி.எஸ்.பாபுவின் உடலை தூக்கி சென்ற விஜய்

 

மறைந்த எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய், பாபுவின் உடலை சுமந்து சென்றார். இது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

மறைந்த கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், இறுதிச் சடங்கில் பங்கேற்றுள்ள முதலமைச்சர் விஜய், அவரது உடலை தோளில் சுமந்து தூக்கிச் சென்றார்.

சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து, இன்று முதல் 7 நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தவெக தலைமை அறிவித்தது.