"விஜய் நல்ல நிர்வாகத்தை வழங்க முடியாது, மக்கள் அவருக்குத் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்"- பி.டி.செல்வகுமார்
அரசியலில் மாற்றத்தை நடிகர் விஜயால் கொடுக்க முடியாது. விஜயால் தனித்துவமான நிர்வாகத்தையும் கொடுக்க முடியாது. மக்களுக்கு நல்லது செய்ய திமுகவில் இணைந்து இருக்கிறேன் என நடிகர் விஜயின் முன்னாள் மேலாளர் பிடி செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நடிகர் விஜயின் முன்னாள் மேலாளரும் தற்போதைய திமுகவில் இணைந்த பிடி செல்வகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிகமானோர் கேட்கிறார்கள் திமுகவில் ஏன் இணைந்தீர்கள் என்று விஜய்யுடன் 28 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். அவரை அவருடன் இருந்து என்னை ஒதுக்குவது போல நினைத்தேன். வெளியே வந்து கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்திருக்கிறேன். பல பள்ளிக்கூடங்களை கட்டித் தந்திருக்கிறேன். 28 ஆண்டுகள் அவரோடு பணியாற்றிய போதிலும் அவர் என்னை கண்டு கொள்ளவில்லை. அதனால் திமுகவில் இணைந்தேன். நான் மக்களுக்கு நல்லது செய்ய ஆசைப்படுகிறேன். அதனால் பலத்திற்காக திமுகவில் இணைந்திருக்கிறேன்.
விஜய்க்காக உழைத்தவர்களுக்கு மட்டும்தான் பதவி வழங்கப்படும் என்று புஸ்ஸிஆனந்த் கூறினார். ஆனால் தற்பொழுது தவெகவில் பதவி வழங்கப்பட்டிருப்பவர்கள் அவர்களைப் பார்த்தோம் என்றால் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் , செங்கோட்டையன் இவர்களுக்கெல்லாம் தமிழக வெற்றி கழகத்தில் பதவி கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? பிரச்சனை வந்தால் விஜய் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என புஸ்ஸி ஆனந்த் கூறுகிறார். இப்படி கூறினால் இளைஞர்கள் வாழ்வு எப்படி நன்றாக இருக்கும். தமிழக வெற்றி கழகத்தை கட்டமைத்தவர்கள் எஸ்ஏசி, மற்றும் பிடி செல்வகுமார் தான். புஸ்ஸி ஆனந்த் ஒரு பாண்டிச்சேரி காரர் அவரை உள்ளே விட்டதே தப்பு. நல்ல கட்டமைப்பு இருந்திருந்தால் கரூரில் அந்த சம்பவமே நடந்திருக்காது. நடிகர்களை பார்ப்பதற்கு தொண்டர்கள் மட்டும் வருவதாக பொதுமக்களும் வரத்தான் செய்வார்கள்.
அரசியல் தலைவர்கள் குறித்த நேரத்திற்கு வர வேண்டும். அரசியல் தலைவர்களே குறித்த நேரத்திற்கு வரவில்லை என்றால் மக்களுக்கு எதை கற்பிப்பீர்கள். கரூருக்கு விஜய் சரியான நேரத்தில் சென்றிருந்தால் எந்த அசம்பாவிதம் நடந்திருக்காது. விஜய் இன்னும் அரசியலில் பக்குவப்பட வேண்டும். அவர் முதல்வராக கூட வரட்டும். ஆனாலும் அவர் நல்லவர்களை சேர்த்து வைக்க வேண்டும். இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அரசியலில் மாற்றத்தை விஜயால் கொடுக்க முடியாது. விஜயால் தனித்துவமான நிர்வாகத்தை கொடுக்க முடியாது. செங்கோட்டையன் 50 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து தேனை எல்லாம் குடித்துவிட்டு தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 226 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது எனது கருத்து” என்று கூறினார்.