#BREAKING புதுச்சேரியில் ஏப்.5ம் தேதி விஜய் பிரச்சாரம்
Mar 29, 2026, 11:11 IST
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து, ஏப்.5ம் தேதி புதுச்சேரியில் காலை முதல் இரவு வரை விஜய் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் துறை அதிகாரியிடம் அனுமதி கேட்டு தவெக மனு அளித்துள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி தவெக நிர்வாக குழு மற்றும் தேர்தல் இணை கண்காணிப்பாளர் புதியன் அளித்துள்ள மனுவில், தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து, ஏப்.5ம் தேதி
காலாப்பட்டு நுழைவாயில் (காலை 9.30 மணி)
முதியால்பேட்டை மணிகுண்டு (காலை 10 மணி)
அதிதி ஹோட்டல் சிக்னல் (காலை 10.30 மணி)
உப்பளம் வாட்டர் டேங்க் அருகில் (காலை 11 மணி) பிரச்சாரம் செய்யவுள்ளார். தேர்தல் பிரச்சாரம் சுற்றுப்பயணத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.