#BREAKING விஜய் பரப்புரைக்கு போதிய பாதுகாப்பு இல்லை- தவெக புகார்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பரப்புரைக்கு போதிய பாதுகாப்பு இல்லை என தலைமை தேர்தல் ஆணையரிடம் கட்சியின் இணைப்பு பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் புகார் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பரப்புரைக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என தலைமை தேர்தல் ஆணையரிடம் கட்சியின் இணைப்பு பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான மனு, இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அம்மனுவில்,காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை மற்றும் போக்குவரத்து திட்டமிடல் இல்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.உரிய பாதுகாப்பு வழங்காததால், பெரம்பூரில் இருந்து கொளத்தூர் வரை உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பிரச்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிர்மல் குமார் தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.