×

புதுச்சேரியில் விஜய் பிரச்சார தேதி திடீர் மாற்றம்

 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரியில் நான்காம் தேதி பரப்புரைச் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து, ஏப்.5ம் தேதி புதுச்சேரியில் காலை முதல் இரவு வரை விஜய் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் துறை அதிகாரியிடம் அனுமதி கேட்டு தவெக மனு அளித்தது. காலாப்பட்டு நுழைவாயில் (காலை 9.30 மணி), முதியால்பேட்டை மணிகுண்டு (காலை 10 மணி), அதிதி ஹோட்டல் சிக்னல் (காலை 10.30 மணி), உப்பளம் வாட்டர் டேங்க் அருகில் (காலை 11 மணி) ஆகிய இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரியில் நான்காம் தேதி பரப்புரைச் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஐந்தாம் தேதிக்கு பதில் நான்காம் தேதியே பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோடி, மு.க.ஸ்டாலின், அமித்ஷா, ஈ.பி.எஸ் உள்ளிட்ட உள்ளிட்ட தலைவர்கள் புதுச்சேரி வருகை காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலாப்பட்டு நுழைவாயில் (காலை 9.30 மணி), முதியால்பேட்டை மணிகுண்டு (காலை 10 மணி), அதிதி ஹோட்டல் சிக்னல் (காலை 10.30 மணி), உப்பளம் வாட்டர் டேங்க் அருகில் (காலை 11 மணி) ஆகிய  4 இடங்களில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி அளித்துள்ள காவல்துறை, வாகனப் பிரசாரம் செய்ய காலை 9 மணி முதல் மதியம் 12 மணி மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.