×

“என்னை மன்னிச்சிடுங்க! வாழ்நாள் வரை உங்களுடன் இருப்பேன்’’ - கண்ணீர் மல்க கதறி அழுத விஜய்

 

கரூர் மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தவெக தலைவர் விஜய், கண்ணீர் மல்க கதறி அழுததாக கூறப்படுகிறது.


கரூர் நெரிசலில் சிக்கி இறந்த 41 பேரின் குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து அவர்களை தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார். குறிப்பாக உயிரிழந்தவர்கள் குடும்பத்தை 3 மணி நேரம் தனித்தனியே சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த மனுக்களை உடனடியாக நிறைவேற்றும் பணிகளை தொடங்க வேண்டும் என விஜய் கட்சியின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும்போது கண்ணீர் விட்டு அழுத த.வெ.க. தலைவர் விஜய், “உங்கள் இழப்பை என்னால் ஈடு செய்யவே முடியாது, உங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து தேவைகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன். சென்னைக்கு அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நிச்சயம் உங்களை கரூரில் வந்து சந்திப்பேன். மண்டபம் கிடைக்காததால் தான் தன்னால் கரூர் வர இயலவில்லை. வாழ்நாள் வரை உங்களுடன் இருப்பேன். குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் நான் இருப்பேன்.