"வாங்க வேண்டிய இடத்தில் வாங்கிட்டு குத்த வேண்டிய இடத்தில் குத்திட்டீங்க..”- மக்களை ஊழல்வாதி என விமர்சித்த அமைச்சர்
Jun 29, 2026, 15:45 IST
இந்தத் தேர்தலில் தமிழ்நாடு மக்கள்தான் மிகப்பெரிய ஊழல்வாதிகள் என தவெக அமைச்சர் விஜய் பாலாஜி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சமபந்தி விருந்து மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய தவெக அமைச்சர் விஜய் பாலாஜி, “கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் ஊழல் செய்வதைப் பற்றிப் பார்த்திருப்பீர்கள். ஆனால், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்களாகிய நீங்கள் செய்ததுதான் மிகப்பெரிய ஊழல். வாங்க வேண்டிய இடத்தில் வாங்கிக்கொண்டு, குத்த வேண்டிய இடத்தில் சரியாக குத்தி நமது ஆட்சியை அரியணையில் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறீர்கள்” என்றார்.