×

வீடு வீடாக சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும் - விஜய் உத்தரவு.! 

 

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கி உள்ளன. இந்த சூழலில் த.வெ.க. 2-ம் மாநாடு மதுரையில் ஆகஸ்டு 25-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்திருந்தார். முன்னதாக நடிகர் விஜய், கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார்.

இதனிடையே 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்' என வீடு வீடாக சென்று த.வெ.க நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் பிரசாரத்தைத் துவங்கி உள்ளனர்.

இந்நிலையில் முறையாக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க த.வெ.க தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி கிளை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும் என்றும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு த.வெ.க நிர்வாகிகள் நேரில் செல்ல வேண்டும் என்றும், 2 வாரங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகளின் நடவடிக்கைகளை தொகுத்து கட்சி தலைமைக்கு வழங்க வேண்டும் என்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தை விரைவில் முடித்தே ஆக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.