"இரவு முழுவதும் விழித்திருந்து சிறப்பாகச் செயல்பட்டீர்கள்"- அதிகாரிகளைக் கைதட்டிப் பாராட்டிய விஜய்!
சென்னையில் நேற்று இரவு கனமழை செய்ததை ஒட்டி மழைநீர் தேங்காமல் செயல்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் முதல்வர் விஜய் கை தட்டி பாராட்டினார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அதிகனமழையைத் தொடர்ந்து, மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் (Integrated Command and Control Centre - ICCC) முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (18.10.2026) நேரில் ஆய்வு மேற்கொண்டார். ரிப்பன் மாளிகையில் உள்ள இந்த மையத்தில், மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்தும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் அவர் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், சென்னையில் நேற்று இரவு கனமழை செய்ததை ஒட்டி மழைநீர் தேங்காமல் செயல்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் முதல்வர் விஜய் கை தட்டி பாராட்டினார். பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் திட்டவட்டமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.