#BREAKING “திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருக்கிறார்”- விவாகரத்து கேட்டு சங்கீதா மனு
தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், நடிகரும் தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு 73-ஆவது எண்ணாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி வழக்கறிஞர் இல்லாமல் விஜய் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பதாக குற்றம் சாட்டி விவாகரத்து கோரியுள்ளார்.
இது தொடர்பாக சங்கீதா அளித்துள்ள மனுவில், "நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ஆம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.