×

விஜயுடன் பதவியேற்கும் 9 அமைச்சர்கள்!

 

நாளை காலை 10 மணிக்கு தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.

ஆட்சி அமைக்க 118 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில் 120 பேரின் ஆதரவு கிடைத்ததால் விஜய் முதல்வராகிறார். விஜய்க்கு முதல்வராக தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைக்க உள்ளார். நாளை காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. விஜயுடன் முதல் கட்டமாக 9 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.

அமைச்சர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. விஜய்க்கு பொதுநிர்வாகம் மற்றும் உள்துறை ஒதுக்கீடு செய்யப்படலாம். நிர்மல்குமாருக்கு மின்சாரத்துறை, செங்கோட்டையனுக்கு பொதுப்பணித்துறை, என்.ஆனந்த் நகராட்சி நிர்வாகம்,ஆதவ் அர்ஜூனா விளையாட்டு மற்றும் மதுவிலக்குத்துறை, அருண்ராஜ் வணிகவரித்துறை ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்களன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்கின்றனர். புதிய எம்.எல்.ஏக்களுக்கு வரும் திங்கட்கிழமை தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு செய்து வைக்கவுள்ளார்.