☰
×

ஜெயலலிதா பாணியை கையில் எடுக்கும் விஜய்-  மீண்டும் ஒரு மக்கள் இயக்கம்

 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு மிக முக்கியமான ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதுப்பித்து, அதை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக (Mass Movement) மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே 11.11.2002-ல் போடப்பட்ட அரசாணையின் படி தமிழ்நாடு மழைநீர் சேகரிப்பில் முன்னோடி மாநிலம். இப்போ 24 வருடம் கழித்து, பல இடங்களில் அந்த கட்டமைப்புகள் பழுதடைந்து, தூர் பிடித்து, செயல்படாமல் இருப்பதால், அவற்றை Rejuvenation (புத்துயிர்) செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. "IMPLEMENTATION OF RAIN WATER HARVESTING AS A MASS MOVEMENT - RENEWED INITIATIVES" அதாவது "மழைநீர் சேகரிப்பை ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்துதல் - புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள்"*

அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகளில் உள்ள பழைய மழைநீர் தொட்டிகளை ஆய்வு செய்து, சுத்தம் செய்து, தூர் வாரி, உடைந்ததை சரி செய்தல், புதிய கட்டமைப்புகளை உருவாக்குதல்: Roof Top Harvesting மற்றும் Ground Water Recharge என புதிய கட்டிடங்களுக்கு மட்டுமல்ல, பழைய கட்டிடங்களுக்கும் கட்டாயம், மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை அவர்களின் சொந்த பொறுப்பாக மாற்றுவது, தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைத்து தொடர் கண்காணிப்பு ஆகியவை இப்பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

அனைத்து அரசு கட்டிடங்களிலும் மழைநீர் கட்டமைப்புகள் முழுமையாக செயல்படுகிறதா என ஆய்வு செய்யப்படும். மொட்டை மாடி, கால்வாய்கள், வடிகட்டும் அறைகள், செறிவூட்டும் குழிகள் சுத்தம் செய்யப்படும். சாலைகள், பொது இடங்களில் இருந்து வரும் மழைநீரை சேமிக்க Recharge Trenches, Recharge Shafts, Percolation Pits அமைக்கப்படும். புதிய குடிநீர் திட்டங்களில் மழைநீர் சேகரிப்பு ஒரு பகுதியாகவே இருக்கும்! Check Dams, Soak Pits கட்டப்படும். TV, Radio, செய்தித்தாள், Social Media, Hoardings, சுவர் ஓவியங்கள், பேருந்து விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  சுய உதவிக்குழுக்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மூலம் வீடு வீடாக பிரச்சாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

சிறப்பாக செயல்படுபவர்களுக்கு அரசு விருது வழங்க உள்ளது!

- சிறந்த மாவட்டம்
- சிறந்த நகராட்சி / ஊராட்சி
- சிறந்த பள்ளி / கல்லூரி
- சிறந்த அரசு அலுவலகம்
- சிறந்த குடியிருப்போர் சங்கம்