ஜூலி மீண்டும் வீடியோ!...விஜய் பாஜகவின் B டீம் இல்ல!.. A டீமே அவர்தான்!
Mar 18, 2026, 10:25 IST
நடிகை ஜுலி அண்மையில் விஜய்க்கு எதிராக தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வருகிறார். இதனால் ஜூலியை தவெகவினர் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய்யை பாஜகவின் A டீம் என விமர்சித்து ஜூலி புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்
எல்லோரும் எல்.பி.ஜி. சிலிண்டர் வாங்கி வைத்துவிட்டீர்களா என்று கேட்டு தன் வீடியோவை துவங்கியிருக்கிறார் ஜூலி. வழக்கம் போன்று மோடி அரசு நம் வயிற்றில் அடிக்காமல் இருந்தால் ரொம்பவே சந்தோஷம். ஆனால் இது பற்றி எல்லாம் நம் அண்ணன் பேச மாட்டார் என்று விஜய்யை சொல்லியிருக்கிறார் ஜூலி.
அண்ணன் இங்கு பேசினால் ஜி சொல்லி சிபிஐ வந்து குடுமியை பிடித்து ஆட்டி வைத்துவிடும். அதனால் அவர் பேச மாட்டார். பாஜகவுடன் சேர்கிறோமா இல்லையா என்று நிறைய பேச்சு இருக்கிறது. அவங்க சேர மாட்டாங்கனு நானே சொல்கிறேன். பாஜகவை தமிழ்நாடு எதிர்க்கிறது. anti பாஜகனு பேசணும். அதனால் நாங்க எல்லாம் பாஜக உடன் சேரவில்லை. எங்களின் கொள்கை எதிரியுடன் சேரவில்லை. நாங்கள் பாஜகவுக்கு எதிரானவர்கள்னு சொல்லி தானே ஓட்டு வாங்க முடியும். அதற்காக அவர்கள் பண்ணும் ஜோக் இது. இதை மக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம். மறக்காமல் ஏப்ரல் 23ம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ஜூலி.
பாஸ்கட் பால் அண்ணா வேறு தனி விமானத்தில் மது பாட்டில் எடுத்துச் சென்று சிக்கிக் கொண்டார் என்கிறார்கள். இதெல்லாம் கட்சிக்கு அசிங்கம் இல்லையா, எதுக்குணே இது என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை கேட்டிருக்கிறார் ஜூலி. சட்டம் தன் கடமையை செய்யும். தீ பரவட்டும். வழக்கம் போன்று வல்கர் வாரியர்ஸ், அவதூறு வாரியர்ஸ் வந்து வன்மத்தை கக்கலாம். பாஜக= தவெக, தவெக=பாஜக என்பதை மறக்க வேண்டாம். பாஜக தான் தவெக, தவெக தான் பாஜக. அண்ணன் பி டீம் எல்லாம் இல்லை. ஏ டீமே அண்ணன் தான் என்று விஜய்ணாவை பற்றி கூறி வீடியோவை முடித்துக் கொண்டிருக்கிறார் ஜூலி.