கருணாநிதி, ஸ்டாலின், மேயர் பிரியா உள்ளிட்டோரை ஏஐ மூலம் சித்தரித்து வீடியோ : தவெகவினருக்கு திமுக மகளிர் அணி கடும் கண்டனம்!
.'ஜெயிலர்-2' படத்தில் இடம் பெற்ற, 'பிந்தாஸ்' பாடலில், ஏ.ஐ., என்ற செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, மேயர் பிரியா ஆகியோர் நடனம் ஆடுவது போல் உருவாக்கப்பட்ட வீடியோ, சமூகவலைதளங்களில் நேற்று பரவியது. இதற்கு, தி.மு.க., மகளிர் அணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
த.வெ.க.,வினரின் சிந்தனை எவ்வளவு ஆபாசமும், வக்கிரமும் நிறைந்தது என்பதற்கு, இது ஒரு சாட்சி. 'ஆன்லைன் அப்யூசர்களால்' நிறைந்த ஆபாச வெறிபிடித்த கும்பல் தான், த.வெ.க., கட்சி. அதன் எம்.எல்.ஏ., முதல் உறுப்பினர் வரை, இவர்களை தேடிப்பிடித்து கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்த, மறைந்த தலைவரை இழிவுபடுத்தும், த.வெ.க.,வின் மலிவான புத்திக்கும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து, சமூகப் பணியாற்றும் பெண்ணை இழிவுபடுத்தும் ஆணாதிக்க ஜாதி வெறிக்கும், தமிழக மக்கள் பாடம் புகட்டும் நாள், வெகு தொலைவில்
இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Bindass AI edition for @arivalayam as per their request.😂 Enjoy @kalaignar89 https://t.co/CgLnsdRYsv
— Fan account : Harish Kuppusamy (@ThanosVers) November 26, 2026