திரையில் விஜயபிரபாகரன் தோல்வி குறித்து ஒளிபரப்பான வீடியோ- த.வெ.க எம்.எல்.ஏ செய்த கேவலமான செயல்
விருதுநகரில் ஜனநாயகன் ஒளிபரப்பு செய்யப்பட்ட திரையில் விஜயபிரபாகரன் தோல்வி குறித்து த.வெ.க எம்.எல்.ஏ ஏற்பாட்டில் ஒளிபரப்பான வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது.
விருதுநகரில் நேற்று 3 திரையரங்குகளில் நடிகர் முதல்வருமான விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்பட்டது. அமிர்தராஜ் திரையரங்கில் நடைபெற்ற ரசிகர்களுக்கான சிறப்பு காட்சியை காண விருதுநகர் எம்.எல்.ஏ. செல்வம் வருகை புரிந்தார். திரைப்படக்காட்சிக்கு இடையே த.வெ.க எம்.எல்.ஏ செல்வம் தரப்பில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று திரையிடப்பட்டது. அந்த வீடியோவில், சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட “விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தோல்வி” என செய்தியாக வெளியானது ஒளிபரப்பப்பட்டது. மேலும் அந்த வீடியோவில் எம்.எல்.ஏ.செல்வம் வாக்கு சேகரித்த காட்சியும், வெற்றிக்கு பின் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி குறித்த காட்சியும் இடம்பெற்றிருந்தது.
தவெக எம்.எல்.ஏ.வை கண்டித்து அமிர்தராஜ் திரையரங்கை தேமுதிகவினர் முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் பேரிகார்ட் போட்டு தடுத்து நிறுத்தியபோதும் அதனை தள்ளிவிட்டு திரையரங்கு முன் குவிந்தனர். திரையரங்குமுன் குவிந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர்.