பிரபல நடிகர் ஷ்யாம் குமார் ஜீவரத்தினம் காலமானார்..!
Jul 31, 2026, 05:20 IST
பிரபல நடிகரும் டப்பிங் கலைஞருமான ஷ்யாம் குமார் ஜீவரத்தினம் மாரடைப்பு காரணமாகக் காலமானார். இச்செய்தியை அவரது நண்பரும் சக நடிகருமான ஆதேஷ் பாலா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில்,
மிகச்சிறந்த நடிகர், பாடகர்,என் சிறந்த நண்பரை ஷ்யாம் குமார் ஜீவரத்தினம் இழந்துவிட்டேன். மனம் ஏற்க மறுக்கிறது.
மாரடைப்பால் காலமானார்
ஏன் சார் அவசரம்
இனியொரு பிறவி இருந்தால் உங்கள் நட்பு வேண்டும் சார்.
இழந்துவாடும் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த
இரங்கல்கள்
'ராஜமாபுரம்' உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 'ஜோக்கர் நாற்காலி', 'இட்லி கடை' போன்ற குறும்படங்களிலும் நடித்துப் புகழ்பெற்ற இவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.