☰
×

முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி திடீர் இடமாற்றம்

 

நாளை ஈரோட்டில் முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது

தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கிறது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் பெற்ற வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகம், அடுத்து நடைபெற உள்ள ஐந்து தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு தயாராகி வருகிறது. விஜய் இன்னும் நேரடி பிரச்சாரத்தில் இறங்கவில்லை என்றாலும், கட்சியினர் களத்தில் இறங்கிவிட்டனர். ஒருபக்கம் சுவர் விளம்பரங்கள், மறுபக்கம் கறி விருந்துகள், வீடு வீடாக வேட்பாளர்கள் பயணம் என அரசியல் களம் அனல் பறக்கிறது. இந்த நிலையில் தான் தவெக தலைமைக்கு ஒரு ரகசிய ரிப்போர்ட் சென்றுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதில், ஐந்து தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் தவெகவுக்கு சவாலானதாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கொங்கு இன்ஜினியரிங் காலேஜ் என திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பெருந்துறை காஞ்சி கோவில் சாலையில் உள்ள 'ஸ்ரீ லட்சுமி நாராயண  மஹால்' -க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நவ.3ஆம் தேதி ஈரோடு பெருந்துறை செல்லும் முதல்வர் விஜய், செங்கப்பள்ளியில் இருந்து வாய்க்கால்மேடு வரை சுமார் 30 கி.மீ. ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.