“வீடு தேடி ரேஷன் திட்டம் தொடரும்”- அமைச்சர் வெங்கட்ரமணன்
May 22, 2026, 16:50 IST
சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன், “வீடு தேடி ரேஷன் திட்டம் தொடரும். தேவையான நிதி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் இனி இருக்காது. நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் லஞ்சம் தர தேவையில்லை. முதல்வர் விஜய்யின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்” என்றார்.